பூ செய்ய தேவையானவை:
கோல்ட் அல்லது சில்வர் கலர் பூ செய்யும் கம்பிகள்
ஸ்டாகின்ஸ் துணி
பூவை காட்டுவதற்கு அலுமினியக்கம்பி
பச்சை ஃ ப்லோரல் டப்
போலன்ஸ்
நூல்கண்டு
செய்முறை :
*முதலில் சில்வர் கம்பியை 4 அல்லது 5 இஞ்சி அளவில் வெட்டிக் கொள்ளவும் .(ஒரு பூ செய்ய 3அல்லது 4 கம்பிகள் வேண்டும்)
*படத்தில் காட்டியபடி வட்டமாக (அல்லது உங்களுக்கு விருப்பமான வடிவத்தில்) வளைத்து கம்பியை வளைத்து திருக்கிக் கொள்ளவும் .
*பின் ஸ்டாகின்ஸ் துணியினை இழுத்துக் கம்பி இல் கட்டி விடவும் .
*பூவைக்க்கட்டும் அலுமினியக் கம்பி இல் போலன்ஸ் ஐ நூலால் இறுக்கமாக கட்டிக் கொள்ளவும்.
*பின்னர் அலுமினியக் கம்பி முழுவதும் பச்சை டேப் ஐ சுற்றிக் கொள்ளவும்
பின்னர் நாம் செய்து வைத்துள்ள இதழ்களை ஒவொன்றாக போலன்ஸ் பக்கத்தில் சுற்றி கட்டி விடவும்.
*கட்டியதும் கீழ் பக்கம் வெளியே தெரியும் கம்பியிலும் பச்சை டேப் ஆல் சுற்றி கட்டிக் கொள்ளுங்கள்.இப்போது பூ தயார் .
*இது போல் நிறைய பூ செய்து ஆர்டிபிசியல் இலைகளையும் சேர்த்து பூ ஜாடியில் போட்டு வைத்தால் பார்க்க அழகாக இருக்கும் .
ஸ்டாகின்ஸ் பூக்கள் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது இது செய்வதற்கு எளிது.உங்க செய்முறை பார்த்து தான் தெரிந்துக்கொண்டேன் எனக்கு இது மிகவும் பிடித்து இருக்கிறது. நானும் இதை செய்து பார்க்கிறேன் .இதுப்போல் இன்னும் நிறைய பூக்கள் செய்ய என் இனிய வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஆமாம் இது மிகவும் ஈஸி .நீங்களும் ட்ரை பண்ணுங்க. நல்ல வரும் .சந்தேகம் ஏதும் இருந்தால் கேட்கவும்
பதிலளிநீக்கு