புதன், 3 மார்ச், 2010

பொறித்து கறிவைத்த மீன்


தேவையானவை:

மீன் (நீங்கள் விரும்பிய மீன் )

சின்ன வெங்காயம் -கை அளவு (பொடியாக நறுக்கியது )

தக்காளி -1 ( பொடியாக நறுக்கியது )

பச்சை மிளகாய் -2

இஞ்சிபூண்டு விழுது -சிறிதளவு

புளி -எலுமிச்சை அளவு

தேங்காய்ப்பால் -1 /4 கப்

பொடி வகைகள்:

மஞ்சள் பொடி -1 /2ஸ்பூன்

மிளகாய் பொடி-1spoon

சோம்புபொடி-1 /2 ஸ்பூன்

மல்லிபொடி 1 /2 ஸ்பூன்

நல்லமிளகுப்பொடி -1 /4ஸ்பூன்

உப்பு

தாளிக்க :

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு -1 /4 ஸ்பூன்

கறிவேப்பிலை -சிறிதளவு

வெந்தயம் -1 /4 ஸ்பூன்

ஜீரகம் -சிறிதளவு

செய்முறை :

மீனை சுத்தப்படுத்தி அதில் சிறிதளவு மஞ்சள் பொடி,மிளகாய் பொடி ,நல்லமிளகுப்பொடி,இஞ்சிபூண்டு விழுது ,உப்பு இவற்றை போட்டு விரவி வைத்து 10 நிமிடம் கழித்து பொறித்து எடுக்கவும்

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்துக் கொள்ளவும் .

பின்னர் அதில் சின்ன வெங்காயம் ,தக்காளி ,ப.மிளகாய் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்

வதங்கியதும் அதில் பொடிவகைகளை போடவும் ,சிறிது நேரம் கிளறி புளி ,உப்பு சேர்த்து கொதிக்க விடவும் .

நன்கு கொதித்து மசாலா வாசம் நீங்கியதும் பொறித்து வைத்த மீனை குழம்பில் போட்டு 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும் .

கடைசியில் தேங்காய்ப்பால் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக