திங்கள், 8 மார்ச், 2010

வெஜிடபிள் உப்புமா


தேவையானவை:

உப்புமா ரவை -1 கப்
மிக்ஸ்ட் வெஜ்டேபிள்ஸ் -1 கப்
வெங்காயம் -1
தக்காளி -1 /2
பச்சைமிளகாய் -2
இஞ்சி பூண்டு விழுது -1 /2 ஸ்பூன்
தேங்காய் பால் -1 /2 கப்
தண்ணீர் -2 கப்
எண்ணெய் - 2 ஸ்பூன்
மல்லிதழை -சிறிதளவு

பொடிவகைகள் :

மஞ்சள் பொடி-1 /4 ஸ்பூன்
மிளகாய் போடி -1 /2 ஸ்பூன்
கறிமசாலா -2 ஸ்பூன்
பெருஞ்சீரகப்பொடி-1 /2 ஸ்பூன்
ஏலம் ,கிராம்பு,பட்டை பொடி -1 /2 டீஸ்பூன்

செய்முறை :

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது போட்டு , சிவந்ததும் அதில் ஏலம் ,கிராம்பு,பட்டை பொடி போடவும்.

பின்னர் ,அதில் வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

அதில் சிறிது மஞ்சள்,மிளகாய் பொடியும் போட்டு வதக்கவும்.

வதங்கியதும் மற்ற பொடிகள் அனைத்தையும் போட்டு கொள்ளவும்.

மசாலா வாசம் நீங்கியதும் வெஜிடேபிள்ஸ் ஐ போட்டு 2 கப்தண்ணீர் +தேங்காய் பால் விட்டு கொதிக்க விடவும்.

கொதிக்கத்தொடங்கியதும் உப்புமாரவையை போட்டு கிளறி மூடி வைக்கவும்.

நீர் வற்றி உப்புமா வெந்ததும் , மல்லி இல்லை தூவி சிம்மில் 3 நிமிடங்கள் போட்டு இறக்கவும்.

இப்போது உப்புமா ரவை தயார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக