செவ்வாய், 30 மார்ச், 2010

ஜெனீவா



ரூபாய் நோட்டுகளில், அதிகமாக கையாள்பவர்களுக்கு அவற்றில் உள்ள
கிருமிகள் மூலம் தொற்று காய்ச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் ஏவ்ஸ் தாமஸ். ஜெனீவா பல்கலைகழக மருத்துவமனையில்
உள்ள தொற்று காய்ச்சல் ஆராய்ச்சி மைய தலைவராக உள்ளார். இவர், ரூபாய்
நோட்டுகளில், அதிகமாக புழக்கம் வைத்திருப்போருக்கு ஏற்படும் பாதிப்புகள்
பற்றி ஆய்வு மேற்கொண்டார்.

இதில், ஆச்சர்யம் அளிக்கும் விவரங்கள் தெரியவந்தன. இதுபற்றி தாமஸ்
கூறியதாவது:ரூபாய் நோட்டுகளில் தொற்று காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய கிருமிகள்
உள்ளன. ஏற்கனவே, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து காற்று மூலமாக இந்த
கிருமிகள் ரூபாய் நோட்டுகளில் பரவுகின்றன. இத்தகைய கிருமிகள் 24 மணி நேரத்தில்
இருந்து 17 மணி நேரம் வரை வீரியத்துடன் இருக்கும்.


கிருமிகள் உள்ள ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி விட்டு, பின்னர் கைகளை
மூக்கிலோ, அல்லது வாயிலோ வைத்தால் நமக்கும் அந்த பாதிப்பு ஏற்பட்டு விடும்.
ரூபாய் நோட்டுகளில், அதிகமாக புழங்கும் வங்கி ஊழியர்கள் போன்றவர்களுக்கு
மட்டுமே இதுபோன்ற பாதிப்பு ஏற்படும். மற்றவர்களுக்கு, இதற்கான வாய்ப்பு
மிகவும் குறைவு.


கையுறைகள், முகமூடிகள் அணிந்து கொள்வதன் மூலம் இதுபோன்ற பாதிப்பை தவிர்க்க
முடியும். இந்த கிருமிகளில், பல்வேறு வகைகள் உள்ளன. சிலவகை கிருமிகள் இரண்டு
வாரங்கள் வரை வீரியம் இருக்கும். இன்னும் சில வகை கிருமிகள் சில மணி நேரங்கள்
வரை மட்டுமே வீரியத்துடன் இருக்கும்.இவ்வாறு தாமஸ் கூறினார்.


நீங்கள் ரூபாய் நோட்டுக்களை உபயோகப் படுத்தியப் பின் கைகளை கழுவுவது நல்லது.

மெயிலில் வந்தது

ஞாயிறு, 28 மார்ச், 2010

ப்ரூட் கஸ்ட்டட்

தேவையான பொருட்கள் :



கஸ்ட்டட் - 3 ஸ்பூன்
பால் - 2 கப்
தண்ணீர் -1 /2 கப்
சீனி - இனிப்பிற்கு தகுத்த அளவு
வெனிலா எஸசன்ஸ் - 1 ஸ்பூன்
ப்ரூட்ஸ் - உங்களுக்கு விருப்பமான ப்ரூட்ஸ்
டேட்ஸ்
டிரை நட்ஸ் .



செய்முறை:



1)
ப்ரூட்சை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள் .


2)
கஸ்ட்டட் பவுடர் ஐ சிறிது தண்ணீர் அல்லது சிறிது பால் விட்டு கரைத்து கொள்ளவும் .


3) பாலை தண்ணீர் + சீனி சேர்த்து காய்ச்சவும் .


4)
பால் பொங்கும் போது கலக்கிய கஸ்ட்டட் ஐ விட்டு இரண்டு நிமிடங்கள் காய்ச்சவும் .


5)
பிறகு வெனிலா எஸசன்ஸ் சேர்த்து இறக்கி , ஆற வைக்கவும் .


6)
பரிமாறும் போது நறுக்கிய ப்ரூட்ஸ் ,நட்ஸ்,டேட்ஸ் சேர்த்து பரிமாறவும்.



இதில் ஐஸ்கிரீம், ஜெல்லி ,கேக்,டுட்டி பிருட்டி இவை எல்லாம் சேர்த்துக் கொள்ளலாம் .பெரிய கண்ணாடி கப்பில் ஒவ்வொன்றாக அடுக்கி வைத்து மேலே செர்ரி பழம் வைத்தால் பார்க்கவும் நன்றாக இருக்கும் ,சாப்பிடவும் நன்றாக இருக்கும் .

புதன், 24 மார்ச், 2010

பாகற்காய் புளிக்கூட்டு

தேவையான பொருட்கள் :


பாகற்காய்--- 2

சின்ன வெங்காயம்- ஒரு கைப்பிடி அளவு

தக்காளி -1

பச்சை மிளகாய் -2 ( நீளவாக்கில் வெட்டியது)

பூண்டு - 2 பல்

மல்லி தழை - சிறிதளவு

சீனி - சிறிது

புளி கரைசல் -தேவையான அளவு

பொடி வகைகள்:

மஞ்சள் பொடி-1 /2 ஸ்பூன்

மிளகாய் பொடி -1 ஸ்பூன்

ஜீரகம் பொடி - 1 ஸ்பூன்

காயப்பொடி - 1 ஸ்பூன்

தாளிக்க :

கடுகு

கறிவேப்பிலை

வெந்தயம்

முழு ஜீரகம்

இஞ்சி பூண்டு விழுது

செய்முறை:

1 ) பாவக்காய், சின்ன வெங்காயம் ,தக்காளி,பூண்டு இவற்றை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2 ) கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளித்து, பின்னர் சின்ன வெங்காயம் தக்காளி,ப.மிளகாய் இவற்றை போட்டு நன்கு வதக்கவும் .

3 )பின்னர் வெட்டி வைத்த பாவக்காயை போட்டு உப்பும் சேர்த்து நன்கு வேக விடவும் .வெந்ததும் பொடி வகைகளைப் போட்டு ,சிறிதளவு புளி கரைசல் விடவும் .

4 )மசாலா வாசம் போனதும் சிறிது சீனி ,மல்லி தழை தூவவும் .நன்கு நீர் வற்றியதும் இறக்கவும் .


இதை அடுத்தநாள் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இற்கும்.கசப்பும் குறையும் .

பாவக்காய் உடலுக்கு மிகவும் நல்லது

அடிக்கடி உணவில் பாவக்காயை சேர்த்துக் கொள்ளுவதால் சர்க்கரை இன் அளவு கட்டுப்படும் .

பித்தத்தை தணிக்கும்.

தயிரில் உப்பு கலந்து அதில் பாவக்காயை வட்டம் வட்டமாக வெட்டி போட்டு வெயிலில் காயவைத்து, காய்ந்தும் பொறித்து தயிர் சாதம் போன்ற சாதங்களுடன் சாப்பிடலாம் .

வியாழன், 18 மார்ச், 2010

சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ.



வழிகள் :


1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள்.



2. எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.



3. உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள்.


4. பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்கிசிடன்ட் அதிகமுள்ள காரட், ப்ரோக்கோலி, மக்காச் சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.



5. பொதுவாகவே ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றே கால் கரண்டி உப்பு போதும். கடுமையான சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சிறுநீரக மருத்துவரின் அறிவுரைப்படி இன்னும் கூட உப்பைக் குறைக்க வேண்டி இருக்கும்.



6. நேரத்திற்குச் சாப்பிடுங்கள்.



7. ஒரு நாளைக்கு 21/2 முதல் 3 லிட்டர் நீர் அருந்துங்கள். சில வகை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு குடிக்க அனுமதிக்கப்பட்ட நீரின் அளவு குறைவாக இருக்கலாம். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொள்ளுங்கள்.



8. பச்சைத் தேயிலை (கிரீன் டீ- Green Tea) இதயத்திற்கு நல்லது



9. தினமும் உடற்பயிற்சி (குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி) அவசியம்.



10. வீட்டு வேலைகளை நாமே செய்தல், லிப்டை பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறுதல் போன்றவை மறைமுக உடற்பயிற்சியாகும்.



11. எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.



12. புகைப் பிடிப்பதை (நீங்களும் உங்கள் அருகில் இருப்பவரும்) தடை செய்யுங்கள்.



13. மதுபானங்களா! வேண்டவே வேண்டாம்.



14. நேரத்திற்கு தூங்குங்கள்.



15. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.



16. இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களை (பேட்-கொலஸ்டிரால் – Bad Cholesterol) கட்டுப்பாடட்டில் வைக்க தேவையான உணவுப் பழக்கங்கள், மருந்துகள், உடற்பயிற்சிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.



17. வேலை நேரத்தில் சரியாக் கணக்கிட்டுச் செய்து சரியான நேரத்தில் தூங்கி டென்ஸன் ஆகாமல் இருங்கள்.



18. மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, தியானம் ஆகியவற்றைச் செய்வது நல்லது.



19. சிரித்துப் பழகி இசை கேட்டு மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பதை விட இதயத்திற்கு நல்ல மருந்து கிடையாது.



20. வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது.



21. சர்க்கரை நோய் பல நோய்களுக்கு அடிப்படை. உங்களுக்கு சர்க்கரை இருந்தால் நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.



22. இரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் சோள எண்ணெய், ஆலிš எண்ணெய் ஆகியவற்றையும் இதயத்திற்கு இதமான ஓமேகா கொழுப்பு அடங்கிய ஆழ்கடல் மீன்கள், பாதம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியவற்றையும் தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.



23. நாள்பட்ட வியாதிகளான சிறுநீரக நோய், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றுவது அவசியம். தொடர் மருத்துவக் கண்காணிப்பு மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.



24. பிசியான வாழ்க்கையிலும் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள். இடையிடையே சுற்றுலா என்று உங்களை அவ்வப்போது ரீ-சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.



25. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.




எனக்கு இவை மெயிலில் வந்தவை உங்களுக்கும் பயனாக இருக்கும் என்று நினைக்கிறேன் .

டிஷு பேப்பர் பூ



தேவையான பொருட்கள் :

டிஷு பேப்பர் -2

3 டி கிளிட்டர் க்ளு-விருப்பப்பட்ட கலர்

ப்லோரல் டேப்

பூ கட்டுவதற்கு அலுமிய கம்பி

நூல்

செய்முறை :

முதலில் இரண்டு டிஷு பேப்பர் ஐ எடுத்துக் கொள்ளுங்கள் .அதை வசிறி செய்வது போல செய்து கொள்ளுங்கள் (சின்ன குழந்தைகளுக்கு விசிறி செய்து கொடுப்போமே அதே போல தான் )

செய்த விசிறியை (படத்தில் உள்ளது போல்) இரண்டாக மடக்கி நூலால கட்டிக் கொள்ளுங்கள் .

பின்னர் மேலே உள்ள ஓரங்களை ஒரே அளவில் வெட்டிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு டிஷு பேப்பர் ஐ ஒவொரு இதழாக பிரித்து பிரித்து விடுங்கள்.பேப்பர் ஆனதால் மெதுவாக செய்யவும் இல்லை என்றால் கிழிந்து விடும் .

மொத்தம் எட்டு இதழ்கள் வரும் அதாவது ஒரு பேப்பர் உடன் இன்னொரு பேப்பர்உம் சேர்ந்து இருக்கும் அதையும் சேர்த்துதான் பிரித்து விடனும்.

பின்னர் 3d கிளித்ட்டர் ஆல் பூவின் இதழ்கள் மீது லேசாக தேய்த்துக் கொள்ளுங்கள் .

பின்னர் (படத்தில் காட்டிய படி )ஒரு அலுமினிய கம்ம்பியால் (நூல் கட்டிய இடத்தில்) கட்டிக் கொள்ளுங்கள்.

பச்சை ப்லோரல் டேப் கொண்டு கம்பியை சுற்றி கட்டிக் கொள்ளுங்கள் .

இப்போது டிஷு பேப்பர் பூ தயார்