செவ்வாய், 30 மார்ச், 2010

ஜெனீவா



ரூபாய் நோட்டுகளில், அதிகமாக கையாள்பவர்களுக்கு அவற்றில் உள்ள
கிருமிகள் மூலம் தொற்று காய்ச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் ஏவ்ஸ் தாமஸ். ஜெனீவா பல்கலைகழக மருத்துவமனையில்
உள்ள தொற்று காய்ச்சல் ஆராய்ச்சி மைய தலைவராக உள்ளார். இவர், ரூபாய்
நோட்டுகளில், அதிகமாக புழக்கம் வைத்திருப்போருக்கு ஏற்படும் பாதிப்புகள்
பற்றி ஆய்வு மேற்கொண்டார்.

இதில், ஆச்சர்யம் அளிக்கும் விவரங்கள் தெரியவந்தன. இதுபற்றி தாமஸ்
கூறியதாவது:ரூபாய் நோட்டுகளில் தொற்று காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய கிருமிகள்
உள்ளன. ஏற்கனவே, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து காற்று மூலமாக இந்த
கிருமிகள் ரூபாய் நோட்டுகளில் பரவுகின்றன. இத்தகைய கிருமிகள் 24 மணி நேரத்தில்
இருந்து 17 மணி நேரம் வரை வீரியத்துடன் இருக்கும்.


கிருமிகள் உள்ள ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி விட்டு, பின்னர் கைகளை
மூக்கிலோ, அல்லது வாயிலோ வைத்தால் நமக்கும் அந்த பாதிப்பு ஏற்பட்டு விடும்.
ரூபாய் நோட்டுகளில், அதிகமாக புழங்கும் வங்கி ஊழியர்கள் போன்றவர்களுக்கு
மட்டுமே இதுபோன்ற பாதிப்பு ஏற்படும். மற்றவர்களுக்கு, இதற்கான வாய்ப்பு
மிகவும் குறைவு.


கையுறைகள், முகமூடிகள் அணிந்து கொள்வதன் மூலம் இதுபோன்ற பாதிப்பை தவிர்க்க
முடியும். இந்த கிருமிகளில், பல்வேறு வகைகள் உள்ளன. சிலவகை கிருமிகள் இரண்டு
வாரங்கள் வரை வீரியம் இருக்கும். இன்னும் சில வகை கிருமிகள் சில மணி நேரங்கள்
வரை மட்டுமே வீரியத்துடன் இருக்கும்.இவ்வாறு தாமஸ் கூறினார்.


நீங்கள் ரூபாய் நோட்டுக்களை உபயோகப் படுத்தியப் பின் கைகளை கழுவுவது நல்லது.

மெயிலில் வந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக