புதன், 24 மார்ச், 2010

பாகற்காய் புளிக்கூட்டு

தேவையான பொருட்கள் :


பாகற்காய்--- 2

சின்ன வெங்காயம்- ஒரு கைப்பிடி அளவு

தக்காளி -1

பச்சை மிளகாய் -2 ( நீளவாக்கில் வெட்டியது)

பூண்டு - 2 பல்

மல்லி தழை - சிறிதளவு

சீனி - சிறிது

புளி கரைசல் -தேவையான அளவு

பொடி வகைகள்:

மஞ்சள் பொடி-1 /2 ஸ்பூன்

மிளகாய் பொடி -1 ஸ்பூன்

ஜீரகம் பொடி - 1 ஸ்பூன்

காயப்பொடி - 1 ஸ்பூன்

தாளிக்க :

கடுகு

கறிவேப்பிலை

வெந்தயம்

முழு ஜீரகம்

இஞ்சி பூண்டு விழுது

செய்முறை:

1 ) பாவக்காய், சின்ன வெங்காயம் ,தக்காளி,பூண்டு இவற்றை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2 ) கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளித்து, பின்னர் சின்ன வெங்காயம் தக்காளி,ப.மிளகாய் இவற்றை போட்டு நன்கு வதக்கவும் .

3 )பின்னர் வெட்டி வைத்த பாவக்காயை போட்டு உப்பும் சேர்த்து நன்கு வேக விடவும் .வெந்ததும் பொடி வகைகளைப் போட்டு ,சிறிதளவு புளி கரைசல் விடவும் .

4 )மசாலா வாசம் போனதும் சிறிது சீனி ,மல்லி தழை தூவவும் .நன்கு நீர் வற்றியதும் இறக்கவும் .


இதை அடுத்தநாள் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இற்கும்.கசப்பும் குறையும் .

பாவக்காய் உடலுக்கு மிகவும் நல்லது

அடிக்கடி உணவில் பாவக்காயை சேர்த்துக் கொள்ளுவதால் சர்க்கரை இன் அளவு கட்டுப்படும் .

பித்தத்தை தணிக்கும்.

தயிரில் உப்பு கலந்து அதில் பாவக்காயை வட்டம் வட்டமாக வெட்டி போட்டு வெயிலில் காயவைத்து, காய்ந்தும் பொறித்து தயிர் சாதம் போன்ற சாதங்களுடன் சாப்பிடலாம் .

5 கருத்துகள்:

  1. ஹாய் தோழி பாவக்காய் புளிக்கறியில் சீனிக்கு பதில் சர்க்கரை சேர்த்தால் இன்னும் நல்ல ருசியாக இருக்கும் . நான் அப்படி தான் செய்வேன் .நீங்களும் டிரை பன்னி பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. தோழி பாவக்காய் புளிக்கறியில் ந.சீரகம் தூளுக்கு பதில் முழு ந.சீரகம் தாளிக்கும் போது போட்டால் இன்னும் நல்ல மணமாட்டு இருக்கும் .

    பதிலளிநீக்கு
  3. ஆமா சர்க்கரை போடலாம் ,நான் சிலநேரம் போடுவேன்,சில நேரம் சீனி போடுவேன். முழு ஜீரகம் தாளிக்க கொடுத்து இருக்கேனே பாருங்க தோழி

    பதிலளிநீக்கு
  4. சலாம் ஃபாயிஜா.உங்கலுடைய ரெசிப்பிஸ்லாம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு.மென்மேலும் உங்கலுடைய திறமைகள் வளர என்னுடைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. வஅலைக்கும் சலாம் சபீக்கா ? நலமா ?உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி பா .

    பதிலளிநீக்கு