சனி, 3 ஏப்ரல், 2010

கிளே ரோஜாப்பூக்கள்



தேவையானவை :
கலர் கிளேக்கள்

அலுமினியக்கம்பி

கிரீன் டேப்


செய்முறை:

1 ) படத்தில் காட்டியப்படி கிளேயை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும் .(படம்:1 )

2 ) பின்னர் பெருவிரல் கொண்டு கிளேயை தட்டையாக பரத்திக் கொள்ளவும் .(படம்:2 )

3) பரத்திய கிளேயை பெருவிரலாலேயே சுருட்ட ( லேசாக உருட்ட )ஆரம்பிக்கவும் (படம்:3 )

4 ) படத்தில் காட்டியபடி உருட்டிக் கொள்ளவும் (படம் 4 )

5 ) இலைக்கும் இதே போல குட்டி உருண்டையாக கிளேயை எடுத்து பரத்தி படத்தில் காட்டிய படி இலை வடிவத்தில் செய்து வைத்துக் கொள்ளவும் .(படம் 5 )


6 ) படத்தில் காட்டிய படி உருட்டிய இதழ்களை கம்பியில் ஒவொன்றாக ஒட்டிக் கொள்ளவும் (படம் 6 )

7 )இப்படி 5 அல்லது 6 இதழ்கள் ஒட்டிக் கொண்டு இலையையும் ஒட்டி விடுங்கள் பின்னர் கம்பி இல் கிரீன் டேப் சுற்றி விடுங்கள் .

இப்போது ரோஜா பூக்கள் ரெடி .



இதே போல தான் வேறு பூக்கள் நீங்கள் விரும்பிய டிசைன் இல் செய்து கிளாஸ்களிலும் ஒட்டிக் கொள்ளலாம் .பார்க்க நல்ல இருக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக