புதன், 17 மார்ச், 2010

மைதா காஷிவ் நட் குக்கீஸ்

தேவையானவை :

மைதா - கால் கப்

முந்திரி பருப்பு - கால் கப்(கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்)

சீனி பொடி - ஒன்னே கால் கப்

பகிங் பவுடர் - ஒரு ஸ்பூன்

பால் - நான்கு ஸ்பூன்

முட்டை -ஒன்று

வெண்ணை - மூன்று ஸ்பூன்

வெண்ணிலா எஸ்சன்ஸ்-- ஒரு ஸ்பூன்

செய்முறை :

1 ) முதலில் வெண்ணை ,பாகிங் பவுடர் ஐ நன்கு குழைத்துக் கொளவும்

2 ) அதனுடன் பால்+ முட்டை + எஸ்ன்ஸ் ஐ சேர்த்து (எக் பீட்டர்ஆல் )நன்கு அடித்துக் கொள்ளவும்

3 )அத்துடன் மைதா மாவு + சீனி பொடி+ முந்திரி பொடித்தது இவற்றை சேர்த்து பிசைந்துக் கொள்ளவும் .

4 ) சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும்.

5 ) பிசைந்த மாவை எலுமிச்சை அளவு எடுத்து உருட்டி உள்ளங்கையால் லேசாக அழுத்திக் கொள்ளவும்

6 )அதை வெண்ணை தடவிய தட்டில் வைத்து 2 அல்லது 3 நிமிடங்கள் ஓவன் இல் வைத்து எடுக்கவும் .

7 )இப்போது குக்கீஸ் தயார்

குறிப்பு :

சப்பாத்தி மாவு பதம் வரவில்லை என்றால் கொஞ்சம் கூட பால் சேர்த்து பிசைந்துக் கொள்ளுங்கள்

இதை நான் முதன் முறையாக செய்து பார்த்தேன் .ரொம்ப நல்ல வந்தது.

இதில் கலர் அல்லது nuts ஏதும் சேர்க்க வேண்டும் என்றாலும் சேர்த்துக் கொள்ளலாம் .

2 கருத்துகள்:

  1. நட் குக்கிஸ் பார்க்க அழகாக இருக்கு .சாப்பிடனும் போல் இருக்கு .வெண்னைக்கு பதில் நெய் சேர்த்துக்கொள்ளலாமா . நெய் சேர்த்தால் இதுப்போல் நனறாக வருமானு சொல்லுங்க .ஓவனில் டிகிரி செட்பன்னனுமா அல்லது 3 நிமிடம் சும்ம வைத்தா போதுமா.அதை கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. நான் இதை ரெசிபீஸ் புக் பார்த்து செய்தேன் .நெய் சேர்த்தல் நன்றாக வரும் என்று நினைக்கிறன் .செய்து பார்த்து சொல்கிறேன்.
    என் ஓவன் இல் டிக்ரீ இல்லை.அதனால் நான் 2 நிமிடங்கள் வைத்தேன்.நீங்கள் முதலில் ஒரு நிமிடம் வைத்து பார்த்து விட்டு அப்புறமாக கூட ஒரு நிமிடம் வைக்கலாம்.இந்த குக்கீஸ் ஐ நான் இரண்டு நிமிடம் வைத்து எடுக்கும் போதும் வேகாதது போல இருந்தது .பின்னர் ஆறியதும் நல்ல வெந்தது போல் ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு