திங்கள், 15 மார்ச், 2010

ரவா கேசரி

தேவையானவை :

கேசரி ரவை -1 கப்

பால் -1 1 /2கப்

சீனி - 1 3 /4 கப்

நெய் - 4 ஸ்பூன்

தண்ணீர் - 1 1 /2 கப்

ஏலக்காய் -4

வெனிலா எசன்ஸ்-1 ஸ்பூன்

முந்திரி பருப்பு -6

கிஸ்மிஸ் -6

கேசரி பவுடர் -சிறிதளவு


செய்முறை :

1 ) பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு ரவையை பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும்.


2 )வேறு ஒரு பாத்திரத்தில் பால் + நீர் விட்டு ,கேசரி பவுடர் ,ஏலக்காய்,சீனி இவற்றைப் போட்டு மூடி கொதிக்க விடவும்.


3 )கொதிக்க ஆரம்பித்ததும் ரவையை மெது மெதுவாக போட்டு கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும் ,சிறிது எசன்ஸ் சேர்க்கவும் .


4 )வேறு ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு முந்திரிப்பருப்பு ,கிஸ்மிஸ் இவற்றை தாளித்து கேசரி கலவை இல் கொட்டவும் .


5 ) கேசரி கொஞ்சம் இறுக ஆரம்பித்ததும் நெய் தடவிய தட்டில் போட்டு ஆறிய பின் வெட்டிக் கொள்ளவும் .


6 ) நீங்கள் விருப்பபட்டால் செர்ரி பழம் கூட வெட்டி மேலே போடலாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக