செவ்வாய், 6 ஏப்ரல், 2010

முட்டை இட்லி




தேவையான பொருட்கள் :

இட்லி -3
முட்டை -1
வெங்காயம் -1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
பச்சைமிளகாய் -1
கறிவேப்பிலை -தேவையான அளவு
கரம் மசாலா -1 /4 ஸ்பூன்
நல்லமிளகுப்பொடி -1 /2 ஸ்பூன்
இட்லி பொடி - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி -1 /4 ஸ்பூன்
மிளகாய் பொடி (தேவையென்றால் போடலாம் )
நெய் -2 ஸ்பூன்


செய்முறை :

இட்லியை பொடியாக உதிர்திக் கொள்ளவும் .

நான்ஸ்டிக் பான் இல் நெய் விட்டு அதில் கறிவேப்பிலை , வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி கொள்ளவும் .

சிறிது வதங்கியதும் பொடிவகைகளைபோட்டு ஒரு நிமிடம் கிளறி , முட்டையையும் போட்டு கிளறவும் அதனுடன் இட்லியையும் போட்டு நன்கு கிளறவும் ,(கொத்துபரோட்டாவிற்க்கு செய்வது போல் நன்கு பொடி பொடியாக வர வேண்டும் ).5 நிமிடம் களித்து இறக்கி சூடாக பரிமாறவும் .தேவையானால் மல்லி இலை கூட தூவிக் கொள்ளலாம் ..
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக