ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

கோழி பிரியாணி :


தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி -1கிலோ
கோழி - 1 /2கிலோ
வெங்காயம்-2
தக்காளி-1
பச்சை மிளகாய் -5 ,6
இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
எலம் ,கிராம்பு,பட்டை - தலா 3
தயிர் -1 /2 கப்
எண்ணெய் -தேவையான அளவு
நெய் - 2 ஸ்பூன்
முந்திரி பருப்பு -6
கிஸ்மிஸ் -6
பிரியாணி இலை
மல்லி,புதினா
பொடி வகைகள் :
மிளகாய் பொடி
மஞ்சள் பொடி
சோம்பு பொடி
ஜீரகப்பொடி
நல்லமிளகுப்பொடி
பிரியாணி மசாலா
செய்முறை :
அரிசியை கழுவி 3o நிமிடங்கள் ஊற வைக்கவும்.
கோழியை சுத்தப்படுத்தி அதில் தயிர்,மஞ்சள் பொடி உப்பு,இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு ,மல்லி ,புதினா சேர்த்து ஊற வைக்கவும்
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் பிரியாணி இலை எலம் ,கிராம்பு ,பட்டை போடவும்
இஞ்சி பூண்டு விழுது போட்டு லேசாக சிவந்ததும் ,வெங்காயம் போட்டு வதக்கவும்
வெங்காயம் பாதி வதங்கியதும் அதில் பச்சை மிளகாய்,தக்காளி போட்டு வதக்கவும்.
பின்னர் அதில் பொடி வகைகளை போட்டு கிளறவும்
தயிர் இல் ஊறிய கோழியை அதில் போட்டு கிளறவும்
சிறிதளவு தண்ணீர் விட்டு கோழியை வேக விடவும்
தண்ணீர் வற்றி ,அரை வேக்காடு கோழி வெந்ததும் அதில் அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் விடவும் (1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் )
தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் அரிசியை போட்டு 2 ,3முறை கிளறி விட்டு மூடவும்
நீர் வற்றியதும் தீயை சிம்மில் வைத்து தம் போடவும்
அதில் மல்லி ,புதினா இலை தூவி வைக்கவும்
வேறு பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி பருப்பு ,கிஸ்மிஸ் வறுத்து பிரியாணியில் போடவும்
இப்போது சுவையான பிரியாணி தயார்

1 கருத்து:

  1. உங்க சிக்கன் பிரியாணி பார்க்க மிகவும் அருமையாக இருக்கு

    இதை பார்த்தவுடன் சாப்பிடனும் போல் இருக்கு .

    இதை நானும் செய்து பார்க்கிறேன் .

    பதிலளிநீக்கு