ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

கொத்து பரோட்டா


தேவையானவை
பரோட்டா -5
முட்டை - 1
வெங்காயம் -1
தக்காளி -1
பச்சை மிளகாய்-2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது-அரை ஸ்பூன்
ஏலம்,கிராம்பு, பட்டை (பொடித்தது)- 1 ஸ்பூன்
நெய் அல்லது எண்ணெய்- தேவையான அளவு
மல்லி இல்லை -சிறிதளவு

பொடி வகைகள்:
மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்
மிளகாய்பொடி - அரை ஸ்பூன்
ஜீரகப்பொடி - கால் ஸ்பூன்
சோம்புபொடி - அரை ஸ்பூன்
சாட் மசாலா - அரை ஸ்பூன்

செய்முறை:
முதலில் பரோட்டாவை பொடி பொடியாக உதிர்திக் கொள்ளவும்
வெங்காயம், தக்காளி,ப.மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்
கடாயில் எண்ணெய் விட்டு ஏலம்,கிராம்பு,பட்டை போட்டு ,பின்னர் இஞ்சி பூண்டு விழுதையும் போடவும்
விழுது லேசாக சிவந்ததும் வெங்காயம் போடவும்,அத்துடன் சிறிது உப்பும் சேர்த்து அரை வேக்காடு வதங்கியதும் தக்காளி, ப.மிளகாய் யை போட்டு நன்கு வதக்கவும்.
எல்லாம் நன்கு வந்தங்கியதும் பொடி வகைகளை போட்டு சிறிது நீர் விட்டு கொள்ளவும்
பச்சை வாசம் நீங்கி,நீரும் நன்கு வற்றியதும் உதிர்த்த பரோட்டாவை போட்டு குறைந்த தீ யில் 5 நிமிடம் கிளறவும்
வேறு கடாயில் முட்டை ஐ வறுத்து எடுத்து ,அதை பரோட்டவுடன் போட்டு கிளறவும்
கடைசியில் மல்லி இல்லை தூவி பரிமாறவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக